‘எப்படி வந்து சிக்கியிருக்கேன்.. ஆத்தாடி’..ரோட்டு பாலத்துக்கு அடியில் விமானம்.. பதறவைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Oct 22, 2019 02:36 PM

மேகங்களின் இடைவெளியில் புகுந்து விமானம் அந்தரத்தில் விமானம் செல்வதெல்லாம் அறிவியலின் உச்சம். ஆனாலும் அப்படிப்பட்ட விமானம் ஒன்று ரோட்டு பாலத்துக்கு அடியில் டிராக்டரில் கொண்டு செல்லப்படும்போது சிக்கிய சம்பவம் படபடப்பை ஏற்படுத்தியுள்ளது.

Flight got stuck under bridge in china video goes bizarre

சீனாவின் ஹார்பின் என்கிற இடத்தில் டிரக் ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்ட விமானத்தின் டிஸ்-அசெம்பிள் செய்யப்பட்ட பயணிகள் பகுதி, பாலத்துக்கு கீழே சிக்கிக் கொண்டது. டிரக்கில் எடுத்துச் செல்லப்படும்போது, பாலத்தின் அடிப்பகுதிக்கும் விமானத்தின் மேற்கூரைக்கு சிறிதும் இடைவெளி இன்றி ஒட்டி உரசி ஜாம் ஆனது.

 

இந்த நிலையில், பலரும் எப்படி இந்த விமானத்தை வெளியில் எடுக்கப் போகிறோம் என்று யோசித்துக்கொண்டிருக்க, அந்த டிரைவர் விமானத்தை படாத பாடு படுத்தி வெளியில் எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவையும் அந்த டிரைவரையும் பற்றிய இணையவாசிகள் கமெண்டுகளும் வைரலாகி வருகின்றன.

 

Tags : #ACCIDENT #VIDEOVIRAL #BIZARRE #PLANE #CHINA