'உயிரை பணயவைத்து'..'தீயில் சிக்கிய நாய்க்குட்டிகளை மீட்ட துடிப்பான இளைஞர்கள்'.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > கதைகள்

By Siva Sankar | Oct 17, 2019 10:16 AM

குஜராத்தில், பழுந்தடைந்து பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய போலீஸ் வாகனத்தில் திடீரென தீப்பற்றியது.

youth put their lives on stake and rescued the puppies

யாரோ ஒருவர் புகைத்துவிட்டு போட்ட சிகரெட்தான் இந்த வாகனம் தீப்பற்றியதற்கு காரணம் என்று சொல்லப்படும் நிலையில், வாகனத்தின் கீழே, பெண் நாய் ஒன்று அண்மையில் ஈன்ற நான்கு குட்டிகளுடன் இருந்துவந்த நிலையில், தீயின் வாட்டத்தை தாள முடியாமல் தவித்துள்ளது.

அப்போது குஜராத்தின் சுரேந்தர்நகர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியே வந்த இளைஞர்கள் இதனைக் கண்டுள்ளனர். உடனே தாமதிக்காமல், வண்டிக்குக் கீழே படுத்து உள்ளே சென்று நாய்க்குட்டிகளை மீட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

இளங்கன்று பயமறியாது என்பது போல, நெருப்பையே நெருப்பு வேகத்தில் எதிகொண்டு நாய்க்குட்டிகளைக் காப்பாற்றியுள்ள இந்தத் துடிப்பான இளைஞர்கள் பாராட்டைப் பெற்றிருப்பதோடு, இளைஞர்கள் பொறுப்பும் சமூக நலனும் உள்ளவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர்.

 

Tags : #FIREACCIDENT #GUJARAT #VIDEOVIRAL #DOGS