'கர்மா இஸ் எ பூமராங்'.. 'கண்ணுக்கு முன்’ நிரூபித்த 'பிரம்மாண்ட' சண்டை.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்தென் ஆப்பிரிக்காவில் தனது கண் முன் மானைக் கொன்ற முதலையை நீர் யானைக் கடித்துக் கொன்றுள்ள சம்பவம் வீடியோவாக பதிவாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் குருகர் தேசிய பூங்காவில் சுற்றுலா பயணிகள் சிலர் தண்ணீரின் நடுவே இருந்த மணல் திட்டினில் நின்ற மானைக் கண்டனர். அப்போது நீருக்குள் இருந்த முதலை தனது இரையாக மானை டார்கெட் செய்து மணல் திட்டை நோக்கி நகர, சுதாரித்த மான், நான்கு கால் பாய்ச்சலில் நீருக்குள் பாய்ந்தது.
அப்போதும் விடாத முதலை மானை நோக்கி வெகுவேகமாக சென்று மானை நீருக்குள் மூழ்கடித்து வேட்டையாடியது. அதைக் கண்ட நீர் யானை அசுர வேகத்தில் முதலையைக் கடித்து காயப்படுத்தியது. இந்த அதிபயங்கரமான சண்டையில் நீருக்குள் மூழ்கி மானும், நீர் யானை கடித்ததில் முதலையும் உயிரிழந்தன. இதனை அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் வீடியோவாக பதிவு செய்தனர்.
Tags : #ANIMALS #VIDEOVIRAL