‘இத விட சிம்பிளா சொல்ல முடியாது’.. ‘கொரோனா பரவுவதை தடுக்க.. நீங்க பண்ண வேண்டியதெல்லாம் இதான்!’.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Mar 17, 2020 04:01 PM

உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் உலக மக்களிடையே பெருத்த அச்சுறுத்தலை உண்டாக்கியுள்ளது. இந்த வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசுகள் முன்னெடுத்து வரும் நிலையில் இணையதளங்களிலும் தனியார் அமைப்புகள் மற்றும் தனி மனிதர்கள் வெவ்வேறு வடிவங்களில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

Corona Virus Alert Awareness video goes viral on social media

இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவுவதன் முக்கிய நடவடிக்கையாக கருதப்படும் பொது இடங்களில் கூடாதிருத்தல் என்பதை விளக்கும் மிகச்சிறிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 12 நொடிகள் ஓடும் இந்த வீடியோவில் வரிசையாக அடுக்கப்பட்டுள்ள தீக்குச்சிகளில், முதல் தீக்குச்சியில் நெருப்பு பற்ற தொடங்கியதும், அடுத்தடுத்த தீக்குச்சிகளில் நெருப்பு பரவி அடுத்தடுத்து தீக்குச்சிகளும் பற்றி எரிந்து கொண்டே வருகின்றன.

திடீரென இடையில் இருந்த ஒரு தீக்குச்சி எதிர்பாராத விதமாக தன்னுடைய வரிசையிலிருந்து சட்டென விலகி விடுகிறது. இதனால் இதற்கு அடுத்த தீக்குச்சிகள் தீப்பற்றுவதும் தடுக்கப்படுகிறது. இந்த வீடியோவை உருவாக்கி பதிவிட்டுள்ள ஜுவான் டெல்கன் என்பவர்,

‘ஆக நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான். உங்கள் பங்கை நீங்கள் செய்யுங்கள். வீட்டிலேயே இருங்கள்’ என்கிற கேப்ஷனை கொடுத்து பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை திரைப்பிரபலங்கள் முதல் நெட்டிசன்கள் வரை பலரும் பகிர்ந்துள்ளனர.  இன்றைய சூழலில் இந்த வீடியோ பலரையும் யோசிக்க வைத்துள்ளது என்று சொல்லலாம்.

Tags : #CORONAVIRUSOUTBREAK #CORONAALERT #VIDEOVIRAL