இந்தியா முழுவதும் 'உயிரியல் பூங்கா'க்களை கண்காணிக்க... மத்திய அரசு அதிரடி உத்தரவு!... ஏன் தெரியுமா?... அதிர்ச்சியூட்டும் பின்னணி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Apr 06, 2020 06:44 PM

நாடு முழுவதும் உயிரியல் பூங்காக்களில் உள்ள மிருகங்களை கண்காணிக்க மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

center alerts all zoological parks for surveillance amid covid19

உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் கொரோனா தற்போது அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனித இனத்தை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், விலங்குகளைப் பாதிக்காது என்று பரவலாக பேசப்பட்டது.  ஆனால், அதனைப் பொய்யாக்கும் வகையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள புரேன்ஸ் உயிரியல் பூங்காவில் பரமாரிக்கப்பட்டு வரும் பெண் புலி ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் நாடு முழுவதும் உயிரியல் பூங்காக்களில் உள்ள மிருகங்களை கண்காணிக்க மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் புலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து நாடு முழுவதும் உள்ள உயிரியல் பூங்காக்களில் உள்ள மிருகங்களை கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.

மேலும் முன்னெச்சரிக்கையாக மிருகங்களின் நடவடிக்கை மற்றும் மிருகங்களுக்கு ஏதேனும் கொரோனா அறிகுறி உள்ளதா? என சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கவேண்டும். சந்தேகத்திற்கிடமான விலங்குகளின் மாதிரிகளை 15 நாட்களுக்குள் சேகரித்து அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.