‘5000 ரூபாய் வாங்கினேனா?.. ஃபேக் ஐடிய வெச்சு பணம் பறிச்சிருக்காங்க!’.. ‘மன உளைச்சலா இருக்கு!’.. ‘டிக்டாக்’ இலக்கியா புகார்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 17, 2020 06:15 PM

சென்னையைச் சேர்ந்தவர் இலக்கியா(21). இவர் சென்னை வேப்பேரியில் இருக்கும் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து அளித்த புகாரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் டிக்டாக்கில் கடந்த 2 ஆண்டுகளாக அதிக வீடியோக்களை பதிவிட்டு வந்ததாகவும், பின்னர் போலி ஐடிக்களை சிலர் தன் பெயரில் உருவாக்கி, நேரலையில் தான் ஆண்களிடம் பேச பணம் பெற்று மோசடி செய்ததாக வெளியான தகவல்கள் தன் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் தெரிவித்தார்.

tiktok fame ilakkiya complaints against fake ids in her name

மேலும் இதனால் அதிக மன உளைச்சலுக்கு, தான் ஆளாகியிருப்பதாகவும், தன் பெயரில் இது வரை 10க்கும் மேற்பட்ட போலி ஐடிக்களை உருவாக்கி, ரூ.5000 பணம் வாங்கியதாக சிலர் கமெண்ட்டில் கூறுவதாகவும் பேசிய இலக்கியா, தான் அப்படியான குடும்பத்தில் இருந்துவரவில்லை என்றும்,  தவறு செய்திருந்தால் இவ்வளவு தூரம் வந்து பேசவேண்டிய அவசியம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் தப்பானவள் என்று கூட சொல்லிவிட்டு போகட்டும், ஆனால் தன்னை ஏமாற்றிப் பிழைப்பதாக கூறப்படுவதை தன்னால் ஏற்க முடியவில்லை என்றும், இன்னும் திருமணம் ஆகாத தனக்கு திருட்டுப் பட்டம் கட்டுவதால் தான் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் கூறி இலக்கியா அதிர்ச்சி கொடுத்தார். 

சைபர் க்ரைம் போலீஸார் இதுகுறித்து  விசாரித்து வருவதாகவும்,  இலக்கியா யாரையும் ஏமாற்றி பணம் பறிக்கவில்லை என்றும், அவரது பெயரில் போலி ஐடிக்கள் இருப்பது உண்மைதான் என்றும் போலீஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Tags : #TIKTOK #VIDEOVIRAL