லாரி மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து..! 4 குழந்தைகள் உட்பட 21 பேர் பலியான பரிதாபம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Oct 01, 2019 10:17 AM

குஜராத் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து குழந்தைகள் உட்பட 21 பேர் பரிதாபமாக பலியாகினர்.

21 people killed as bus falls into gorge in Gujarat

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள அம்பாஜி என்னும் கோயிலில் இருந்து சுமார் 50 -க்கும் அதிமான பக்தர்களை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்போது திரிசுலியா என்னும் இடத்தில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்து நிலைதடுமாறி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் 4 குழந்தைகள் உட்பட 21 பேர் பரிதாபமாக பலியாகினர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்பு படையினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த விபத்துக்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். அதில், ‘பனஸ்காந்தா பேருந்து விபத்து என்னை மிகவும் கவலைக்குள்ளாக்கியது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags : #PEOPLE #KILLED #BANASKANTHA #AMBAJI #GUJARAT #BUSACCIDENT