"யார் சொன்னது பூமி உருண்டையானது என்று..." "பூமி தட்டையானது என நிரூபிப்பேன்..." விண்வெளி வீரரின் 'விபரீத' செயலும்... முடிவும்... 'நெஞ்சை' உலுக்கும் 'வைரல் வீடியோ'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Feb 25, 2020 07:21 AM

பூமி கோளவடித்தில் அல்ல, தட்டையானது என நிரூபிக்க தானே தயாரித்த நீராவி எஞ்சின் கொண்ட ராக்கெட் மூலம் பயணித்த அமெரிக்க விண்வெளி வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

The astronaut who tried to prove the earth was flat has died

இன்றைய நவீன அறிவியல் உலகிலும் பூமி உருண்டையானது அல்ல, தட்டையானது என நம்பும் சிலர் உள்ளனர். அவர்கள் தீவிரமாக அதற்கான ஆதாரங்களை முன்வைத்து வாதாடி வருகின்றனர்.

'மேட் மைக்' என்ற பெயரில் அழைக்கப்படும் அமெரிக்க விண்வெளி வீரரான மைக்கேல் ஹியூஸ் என்பவரும் அத்தகைய எண்ணம் உடையவர்.  64 வயதான அவர், டிஸ்கவரி சேனல் குழுமத்தின் சயின்ஸ் சேனல் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்துள்ளார்.

இவர், பூமி கோளவடிவமானது அல்ல, வட்ட வடிவிலான தட்டை போன்றது என நிரூபிப்பேன் என கூறினார். இதற்காக நாசாவின் உதவியெல்லாம் கிடைக்காது என தெரிந்த அவர், தானே ஒரு ராக்கெட்டை தயாரித்தார். அந்த ராக்கெட்டைக் கொண்டு தன்னுடைய கூற்றை நிரூபிக்க தயாரானார். அந்த ராக்கெட்டைத் தயாரிக்க சில நிறுவனங்களிடம் நிதியுதவியும் பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து சோதித்து வந்தார். மைக், கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது ராக்கெட் மூலம் தரையில் இருந்து 1,870 அடி உயரத்துக்கு பறந்து பாராசூட் மூலம் தரையிறங்கினார்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மீண்டும் தனது நீராவி ராக்கெட் மூலம் விண்ணில் பறக்க மைக் முயன்றார். திட்டமிட்டபடி கலிபோர்னியாவின் பேர்ஸ்டோ பகுதியில் ராக்கெட்டில் பறக்க மைக்கேல் தயாரானார்.  சுமார் 1500 மீட்டர் உயரத்திற்கு மேல் சென்று தட்டையானது என நிரூபிக்க முயற்சித்து ராக்கெட்டை செலுத்தினர். ஆனால் ராக்கெட் சென்ற வேகத்தில் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த பாராசூட் தனியே பிய்த்துக்கொண்டு சென்று விட்டது. இதனால் பல நூறு அடி உயரத்தில் இருந்து ராக்கெட் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் மைக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அந்த சேனல் தரப்பில், இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #ASTRONAUT #FLAT EARTH #AMERICA #CALIFORNIA #ROCKET