'பசுக்களை' கொன்று தின்னும் 'புலிகளுக்கும்' தண்டனை தேவை... "ஆயுள் தண்டனையா, தூக்கு தண்டனையா? என்றெல்லாம் கேட்கக் கூடாது"...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Feb 06, 2020 12:02 AM

பசுக்களை கொன்று தின்னும் புலிகளுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோவா சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.

Tigers should be punished for killing cows-debate on goa assembly

கோவா மாநிலத்தில் வனவிலங்குகள் சரணாலய பகுதிகளில் உள்ள புலிகள், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழைந்து பசுக்கள் உள்ளிட்ட கால்நடைகளை தாக்கி அவற்றை சாப்பிடுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கோவா சட்டசபையில் இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் திகம்பர் காமத், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.

அப்போது, பசுவை கொன்று அதன் இறைச்சியை சாப்பிடும் மனிதனுக்கு தண்டனை வழங்கப்படும்போது, பசுவை சாப்பிடும் புலிகளுக்கு ஏன் தண்டனை வழங்கக் கூடாது? என தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ சர்ச்சில் அலெமாவோ  கேள்வி எழுப்பினார்.

பசுக்களை அடித்து சாப்பிடும் புலிகளுக்கும் தன்டனை வழங்கப்பட வேணடும். வனவிலங்குகளைப் பொருத்தவரை புலிகள் முக்கியம்தான். ஆனால் மனிதர்களைப் பொருத்தவரை, பசுக்கள் முக்கியம். எனவே, இந்த விஷயத்தில் மனிதர்களின் நலனை புறக்கணிக்கக்கூடாது என்றும் அவர் கூறினார். ஆனால் தண்டனை விவரங்கள் பற்றி அவர் எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #TIGER #GOA #PUNISHED TIGERS #DIGAMBAR KAMAT #GOA ASSEMBLY