'அடேய்... பின்றான் பா.. பின்றான் பா'.. 'மரண மாஸ் பண்ணும் பொடியன்..'.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்By Siva Sankar | Aug 11, 2019 11:05 PM
பொதுவாக சில பைக் மற்றும் கார்களில் யாரேனும் தொட்டால், அலாரம் அடித்து சமிக்ஞை தந்து அலெர்ட் செய்யக் கூடிய நவீன பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கும்.

அவ்வகையில், ஒரு வீதியில் ஒரு பைக் நின்றுகொண்டிருக்கிறது. அவ்வழியே வீட்டுக்கு மளிகைப் பண்டங்கள் போன்ற எதையோ வாங்கிக் கொண்டு செல்லும் பொடியன் (சுட்டித்தனமான சிறுவனை இப்படி அழைப்பதுண்டு) ஒருவன், நின்று யோசிக்கிறான். பின்னர் தன் முன்னால் இருக்கும் பைக்கை காலால் எட்டி உதைக்கிறான்.
உடனே அது சத்தம் போடுகிறது. ஆம்புலன்ஸ் சைரன் போன்ற அந்த சத்தத்தின் வெவ்வேறு ஒலி அலைகளுக்கு ஏற்றாற்போல், அந்த பொடியன் தன் உடலை வளைத்து நெளித்து, ஆடி, பார்ப்பவர்களை அசர வைக்கிறான். இந்த வீடியோவை மகேந்திரா டெக் நிறுவனர் ஆனந்த் மகேந்திரா, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Oh man, this has to be the coolest thing I’ve seen in a long time. I’m still on the floor laughing. My weekend has begun... pic.twitter.com/eYC4MKXRDk
— anand mahindra (@anandmahindra) August 9, 2019
