'யாருக்கு தெரியும்.. ஃபியூச்சர்ல நம்மளலாம்'.. 'தல'யின் 'பஞ்ச்'சும் 'பாட்டும்'.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Aug 06, 2019 01:53 PM
இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும், உலகக் கோப்பை அணிகளின் கேப்டனாகவும் இருந்த தோனி, கிரிக்கெட்டில் இருந்து 2 மாத காலங்கள் ஓய்வு பெற்றதோடு, முறையான அனுமதி பெற்று ஸ்ரீநகரில் தங்கி ராணுவ பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அதுமட்டுமல்லாமல், அவ்வப்போது சிறப்பு ராணுவ நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றியும் வருகிறார். அப்படி அவர் ஸ்ரீநகரில் உரையாற்றும்போது, ‘வரும் காலத்தில் என்னை விட சிறப்பாக ஆடுபவர்களை இன்னும் அதிகமாக பார்க்க முடியும். யாருக்குத் தெரியும், எதிர்காலத்தில் என்னையெல்லாம் நினைவில் வைத்துக்கொள்ளாமல், மறந்தால் கூட அது பெரிய விஷயம் இல்லை’ என்று கூறியதோடு இந்திப் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.
இதனை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், ‘எல்லாம் கொஞ்ச காலம்தான் நண்பா’என்கிற கேப்ஷனில், தோனி பேசியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளதோடு, அந்த வீடியோவையும் அத்துடன் இணைத்துள்ளது.
Nanba, ellaam konja kaalam! 😊 #WhistlePodu #Thala @msdhoni 🦁💛 VC: @aajtak pic.twitter.com/o9RkXJnU2b
— Chennai Super Kings (@ChennaiIPL) August 5, 2019
