'ஒன்னுமே எழுதாத ASSIGNMENT நோட்டுக்கு அதிக மார்க் ஏன்?'... ஒரே நாளில் உலக ஃபேமஸ் ஆன மாணவி!
முகப்பு > செய்திகள் > உலகம்By Siva Sankar | Oct 11, 2019 02:01 PM
ஜப்பானைச் சேர்ந்த நிஞ்சா க்ளப்பினைச் சேர்ந்த யூஜி யமதா என்கிற தன்னுடைய ஆசிரியருக்கு, நிஞ்சா கலாச்சாரத்தை பற்றிய கட்டுரை ஒன்றை அங்கு பயிலும் மாணவி எழுதி அசைன்மெண்ட்டாக ஒப்படைக்க வேண்டும். ஆனால் அம்மாணவி ஒப்படைத்ததோ வெறும் பேப்பர்களைத்தான்.
ஆனாலும் அதிக மார்க்குகளைப் பெற்றது அந்த மாணவிதான். வெறும் பேப்பரை அசைன்மெண்ட்டில் ஒப்படைத்ததற்காகவா இப்படி அதிக மார்க்குகளை அள்ளித் தருவார்கள். யாரேனும் அப்படி செய்வார்களா? இல்லை, இது என்ன வஞ்சப்புகழ்ச்சி அணியா? என்பன போன்ற நிறைய கேள்விகள் எழலாம்.
ஆனால் ஆசிரியர் ஒருவர் மட்டுமே, மாணவி ஏய்மி ஹகா ஒப்படைத்த ரெக்கார்டு குறிப்புகளுக்குள் ஏதோ ஒன்று இருப்பதாக உணர்ந்து வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு, அதனை தீக்கனலில் படும்படி காட்டியுள்ளார். பேப்பரில் இருந்த ஒவ்வொரு எழுத்துக்களும் தெரியத் தொடங்கியுள்ளன.
அப்போது நிஞ்சா கலாச்சாரத்தைப் பற்றி அதில், அம்மாணவி எழுதிய அந்த கட்டுரை ஆசிரியரின் கண்களுக்கு புலப்பட்டுள்ளது. ஆம், இவ்வாறு மறைக்கப்பட்ட கடிதங்களும் நிஞ்சா வீரர்களின் யுத்திகளில் ஒன்று என்பதைத்தான் மாணவி தன்னுடைய அறிவாற்றலையும், அறிவியல் திறனையும் கொண்டு உருவாக்கியுள்ளார்.
அதுமட்டுமல்ல, இதைச் செய்வதற்கு மாணவிக்கு உதவியதோ சோய்பீன்ஸ் கூழ்மம்தான். அதுதான் அந்த இன்விசிபிள் எழுத்துக்களை எழுதுவதற்கு மாணவிக்கு கிடைத்த இங்க்.