'பாலுவுக்கு ரமேஷ புடிக்காது'.. 'அதனால இப்படி துப்பாக்கி வெச்சு.. ஊரே கதறி அழுத சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 13, 2019 11:22 AM

கரூர் அருகே உள்ள வெங்கமேடு பகுதியில் 200 குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் செல்லப் பிள்ளை போல் இருந்த ரமேஷ் என்கிற நாயை அப்பகுதியைச் சேர்ந்த பாலு என்பவர் சுட்டுக் கொன்றுவிட்டதாக, அந்த ஊர் மக்கள் கதறி அழுது, கண்கலங்கி உருகிய சம்பவம் பெரும் சோகத்தை உண்டாக்கியது.

Man shoots a Street Dog, Entire Are people Cried for that

கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக, குட்டிநாயாக அப்பகுதிக்கு வருகை தந்த ரமேஷ், அனைத்து வீடுகளுக்கும் செல்லப் பிள்ளையாக, அனைவர் முகத்தையும் அறிந்துகொண்டு, புதிய ஆட்கள் யாரானும் உள்நுழைந்தால் சங்கேதமாய் குரைப்பது, இரவு நேரங்களில் அனைவர் வீட்டையும் காப்பது, டெக்ஸ்டைல்ஸில் வேலை பார்த்துவிட்டு இரவு நேரம் வீடு திரும்பும் நைட் ஷிப்ட் பெண்களுக்கு பாதுகாப்பாய் அவர்களின் வீடு வரை செல்வது என அந்த மக்களின் உயிரில் கலந்த காவல் தெய்வமாக மாறியிருக்கிறது.

ஆனால், அதே தெருவில் வசித்து வந்த பாலு என்பவருக்கு அந்த நாயை பிடிக்காததால், நாடோடி சமூகத்தினரின் உதவிகொண்டு பாலு, ரமேஷை துப்பாக்கிக் குண்டுக்கு இரையாக்கியுள்ளார். ரமேஷ் ஊயிரோடு இருக்கும்வரை எதற்காகவும் போலீஸ் ஸ்டேஷன் வாசலை மிதிக்காத அந்த ஊர்க்காரர்கள் ரமேஷின் சாவுக்கு நியாயம் கேட்பதற்காக போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நின்றுள்ளனர்.

இந்த நிலையில், பாலு ஏன் ரமேஷை கொல்வதற்குத் துணிந்தார் என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags : #KARUR #POLICE #DOG #DOGSLIFE