‘நமக்கு ஒண்ணுனா உயிரயே கொடுக்குறவங்க..’.. ‘இவங்களுக்கா இப்படி நடக்கணும்’.. பதற வைத்த வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Aug 13, 2019 11:06 AM
கனமழை வெள்ளத்தில் தவித்துக்கொண்டிருக்கும் பலரையும் தக்க தருணத்தில், வந்து மீட்பவர்கள் மீட்புப் படை வீரர்கள். தங்கள் உயிர் உடைமைகளைப் பற்றிய கவலையின்றி, தங்கள் குடும்பதினர் பற்றிய சிந்தனை இருந்தாலுங்கூட, பொது நலத்துக்காக அதையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு, மக்கள் பணியில் ஈடுபடுபவர்கள்.
பேரிடர் மீட்புக் குழுவினர் தொடங்கி வெவ்வேறு வகையாக இயங்கிவரும் இவர்களின் நிலை இன்னும் ஆச்சரியமானது. எல்லாருக்குமான அதே மழை, வெள்ளம் போன்ற பேரிடர்தான் இவர்களுக்கும். ஆனாலும் பிற மக்களைக் காப்பாற்றம் நிஜமான மீட்பர்களாக விளங்குகிறார்கள்.
எனினும் அவர்களுக்கு நேரும் துர் சம்பவங்களும் உண்டு. அப்படித்தான் கர்நாடகாவில் கோப்பல் என்கிற இடத்தில் உள்ள ஆற்றினை கடந்து மீட்புப் படையினர், சென்றுகொண்டிருந்த ரப்பர் படகு திடீரென மரத்தில் மோதி, சிக்கிக் கொண்டது. படகும் கவிழ்ந்தது. இதில் 3 தீயணைப்பு வீரர்களும், 2 தேசிய மீட்புப் படைப்பிரிவு வீரர்களும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.
அதன் பின்னர் அவர்களையும் மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். இணையத்தில் வலம் வரும், இந்த வீடியோவை கரையோரத்தில் இருந்த மக்கள் சிலர் படமாக பிடித்துள்ளனர்.
3 firefighters, 2 NDRF men washed away with floods in koppal #Karnataka
Rubber boat collided with tree & toppled in middle of the roaring rivers. Rescued by army chopper.#KarnatakaFloods #KarnatakaRains #KarnatakaFloodRelief pic.twitter.com/xFpdWZi2Mk
— Nabila Jamal (@nabila__jamal) August 12, 2019