'அவ ரொம்ப சத்தம் போட்டா சார். அதான்...' ஸ்பீக்கர் சவுண்ட 'ஹை'ல வச்சு...! காருக்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Feb 06, 2020 07:18 AM

கர்நாடகாவில் முறைப் பெண்ணை வலுக்கட்டாயமாக கடத்தி தாலி கட்டிய வாலிபர் உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

forcibly abducted a relative of a woman in Karnataka.

கர்நாடகா மாநிலம் ஹசான் மாவட்டத்தில் உள்ள அர்சிகேரே என்ற கிராமத்தை சேர்ந்தவர் மணு (30). இவர் தனது உறவுக்கார பெண்ணை கடந்த ஒரு வருடமாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனால் அவர் பலமுறை தனது காதலை அப்பெண்ணிடம் கூறியதோடு அவரது வீட்டிலும் தெரியப்படுத்தியுள்ளார்.

ஆனால் அந்த பெண் அவரது காதலை ஏற்கவில்லை. பெண்ணின் வீட்டாரும் மணுவுக்கு தங்களது மகளை கட்டிக்  கொடுப்பதில் சம்மதமில்லை என்று தெரிவித்துவிட்டனர். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று மாலதி வழக்கம் போல ஹசான் பகுதியில் உள்ள டெய்லர் கடைக்கு வேலைக்கு சென்றார். ஆனால் அன்று வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் மாலதியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

இரவு முழுவதும் தேடியும் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர்  துத்தா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மணு அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக திருமணம் செய்துவிட்டு ராமாநகாராவில் உள்ள உறவினர் வீட்டில் அடைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

உடனே விரைந்து சென்று மாலதியை மீட்ட போலீசார் மணு உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து விசாரித்தனர்.அப்போது, சம்பவம் நடந்த அன்று மாலதி பணி முடிந்து வீட்டுக்கு செல்ல பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தார். அப்போது நான்கு பேருடன் காரில் வந்த மணு மாலதியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றியுள்ளார். மாலதி சத்தம் போட்டதால் காருக்குள் இருந்த ஸ்பீக்கரை சத்தமாக பாட வைத்துள்ளனர்.

பின்னர், அப்பெண் கதறியபடி இருக்க, மணு தான் வைத்திருந்த தாலியை மாலதியின் கழுத்தில் விடாப்பிடியாக கட்டியுள்ளார். இதனை செல்போனில் வீடியோவாகவும் எடுத்துள்ளனர். இந்தவழக்கில் மூன்று பேரை கைது செய்துள்ள போலீசார் தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : #CAR #MARRIAGE