'சார்! எனக்கு கல்யாணம் சார்'... 'சீனாவிலிருந்து திரும்பிய புதுமாப்பிள்ளை'... 'கல்யாண விழாவில் நிகழ்ந்த களேபரம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Feb 05, 2020 06:06 PM

திருமணத்திற்கு முதல் நாள் தான், சீனாவிலிருந்து மணமகன் திரும்பியது தெரிய வந்ததால், மணமகன் இல்லாமலேயே வரவேற்பு நிகழ்ச்சி நடந்ததுடன், திருமணம் ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Coronavirus Screening: Groom comes home from China For Wedding

உலகையே உலுக்கி வரும் ஒரு சம்பவம் என்றால் அது கொரோனா வைரஸ் தான். இந்நிலையில், சீனாவின் யுவியில் அக்கவுண்டன்ட் ஆக இருக்கும் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது திருமணத்தை முன்னிட்டு, கடந்த ஜனவரி மாதம் 19-ம் தேதி ஊர் திரும்பியுள்ளார். சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருப்பதால் அங்கிருந்து வருபவர்கள் அனைவரையும், `28 நாட்களுக்குப் பொது இடங்களுக்கு வர வேண்டாம்' எனக் கேரள அரசு அறிவுறுத்தியிருந்தது.

இதற்கிடையில், நேற்று (4-ம் தேதி) இளைஞரின் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதுதொடர்பாக, இரு வீட்டார் சார்பாக உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், மணமகன் சீனாவிலிருந்து திரும்பி வந்தவர் என்பது, திங்கள்கிழமை (3-ம் தேதி) தான் பஞ்சாயத்து அலுவலர்களுக்கு தெரியவந்தது. அன்று மாலை கடங்கோடு கிராமத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டதை அறிந்த அலவலர்கள் அதிர்ந்து போயினர்.

பின்னர், உடனடியாக மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு தகவல் போனது. வரவேற்பு விழாவில் பங்கேற்பவர்களுக்கு வைரஸ் தாக்குதல் ஏற்படும் ஆபத்து இருப்பதாக அஞ்சிய மருத்துவக் குழுவினரும், சுகாதார அதிகாரிகளும், மணமகனிடம் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என வலியுறுத்தினார்கள். இதையடுத்து மணமகன் இல்லாமலேயே,  உறவினர்கள் கலந்துகொண்ட வரவேற்பு விழாவின் மேடையில் மணமகள் மட்டுமே அமர வைக்கப்பட்டிருந்தார். 

மணமகனின் தாயார் மாலை அணிவிக்க, மணமகளுக்கு சாஸ்திர சம்பிரதாயங்களுடன் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கமான உபசரிப்பு நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக மணமகன் வீட்டினர் கூறுகையில், ‘மணமகன் தனிமையில் இருக்க வேண்டிய காலக்கெடு முடிவடைந்த பின்னர், சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வோம்’ எனத் தெரிவித்தனர்.

Tags : #KERALA #WEDDING #MARRIAGE #GROOM #MAN