VIDEO: 'ஸ்டைலா... கெத்தா... வந்து நின்ன காதல் பரிசு!'... 'விலை எவ்ளோனு தெரிஞ்சா தல சுத்திடும்'... காதலி கொடுத்த ஷாக்!
முகப்பு > செய்திகள் > உலகம்கால்பந்து வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோவின் பிறந்தநாளை முன்னிட்டு, 1 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு காரை, அவர் காதலி பரிசளித்துள்ளார்.

உலகப் புகழ் பெற்ற கால் பந்து வீரரான ரொனால்டோ, தன்னுடைய 35வது பிறந்தநாளை புதன்கிழமை கொண்டாடினார். அப்போது, இரவு பார்ட்டிக்காக ரொனால்டோ சென்று கொண்டிருந்த போது அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
அவர் சாலைக்குள் நுழைந்ததும், அங்கு மிக விலை உயர்ந்த சொகுசு கார் நிறுத்தப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, அங்கு குழுமியிருந்த ரொனால்டோவின் நண்பர்கள் அவரை வாழ்த்தி பிறந்தநாள் பாடல்களை பாடினர்.
இவை அனைத்தையும் படம்பிடித்த அவருடைய 26 வயதான காதலி ஜார்ஜினா, "என்னுடைய வாழ்க்கையின் நாயகனுக்கு வாழ்த்துகள்! நம்முடைய காதலை இந்த பரிசின் மூலம் வெளிப்படுத்துவதில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி!" என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
அவர் பரிசளித்த, Mercedes AMG G63 என்ற அந்த காரின் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
