'பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ'.. சைரா நரசிம்ம ரெட்டி பார்த்த... 7 போலீஸ்காரர்கள் சஸ்பெண்டு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Oct 04, 2019 04:14 PM

சிரஞ்சீவி, விஜய சேதுபதி உள்ளிட்ட பல்வேறு நடிகர்களின் நடிப்பில் கடந்த காந்தி ஜெயந்தி அன்று வெளியான படம் சைரா நரசிம்ம ரெட்டி.மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவான இப்படம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

7 Police Officers Suspended for watching Sye Raa Narasimha Reddy

இந்தநிலையில் இப்படத்தை முதல் நாள் முதல் காட்சி திரையரங்கில் பார்த்த 7 சப்-இன்ஸ்பெக்டர்கள் தற்போது சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த 7 சப்-இன்ஸ்பெக்டர்கள் முதல்நாள் முதல் காட்சி இப்படத்தை பார்க்க வேண்டும் என திட்டம் போட்டு, வெவ்வேறு காரணங்களை சொல்லி விடுமுறை பெற்றுள்ளனர்.

7 பேரும் வேறு வேறு ஸ்டேஷன்கள் என்பதால் எளிதில் விடுமுறை கிடைத்து விட்டது. ஆனால் படம் பார்த்ததை ஒருவர் புகைப்படம் எடுத்து அதனை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ளார். அது வைரலானதைத் தொடர்ந்து உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. படம் வெளியான அன்று காந்தி ஜெயந்தி என்பதால் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அறிவித்து,போலீசார் விழிப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அதையும் மீறி இவர்கள் 7 பேரும் படத்துக்கு சென்றதால் தற்போது இவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.