'ஐஸ்கிரீம் வாங்கச் சென்ற சிறுமிக்கு'... 'ஆசை வார்த்தைக் கூறிய'... கடைக்காரரால் நேர்ந்த சோகம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 08, 2019 10:15 AM

சென்னையில் 11 வயது சிறுமியிடம், ஐஸ்கிரீம் கடை வைத்துள்ள முதிய வயதான கடைக்காரரின் செயல் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.

sexual abuse for 11 yo child while going to buy a ice cream

வியாசர்பாடி, அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் எஸ்.எஸ். பாண்டியன். 60 வயதான இவர், அதேப் பகுதியில் குளிர்பானம் மற்றும் ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார். மேலும் அப்பகுதியில் அரசியல் கட்சி ஒன்றின், முக்கிய நிர்வாகியாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இரவு, இவரது கடைக்கு, அதேப் பகுதியைச் சேர்ந்த, 11 வயது சிறுமி, ஐஸ்கிரீம் வாங்க வந்துள்ளார்.

அப்போது, பாண்டியன், அச்சிறுமியிடம் ஆசைவார்த்தைக்கூறி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, அலறி கூச்சலிட்டார். இதையடுத்து, அங்கு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், சிறுமியை மீட்டனர். பின்பு பாண்டியனை, பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தனக்கு நடந்தவற்றை குறித்து, பெற்றோரிடம் சிறுமி தெரிவித்துள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், எம்.கே.பி. நகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன்பேரில், பாண்டியனை பிடித்து போலீசார் விசாரித்ததில், கடையின் உள்ளே, சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததை அவர் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பாண்டியனை, போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : #SEXUALABUSE #CHENNAI