'இனியாச்சும் இவங்கள தண்டியுங்க ப்ளீஸ்!'.. பலாத்காரம்' செய்தவர்கள் பெயரை 'மணிக்கட்டில் எழுதிவிட்டு' பெண் எடுத்த 'சோக' முடிவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Oct 08, 2019 11:21 AM

உத்தரப் பிரதேசத்தின் முஸாஃபர் நகரில் பலாத்காரம் செய்தவர்களின் பெயர்களை தனது மணிக்கட்டில் எழுதி வைத்துவிட்டு பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

woman commits suicide after writing rapists name on her wrist

சுமார் ஒருவருடத்துக்கு முன்பாக, உத்தரப் பிரதேசத்தின் முஸாஃபர் நகரத்துக்கு உட்பட்ட, பேடி என்கிற இடத்தில் வசிக்கும் இளம் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் இருந்துள்ளன. இதனை அடுத்து, சில இளைஞர்கள் சேர்ந்து அப்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி அப்பெண்ணின் அப்பா பேசும்போது, ஒரு வருடத்துக்கு முன்னதாக, 3 நபர்கள் சேர்ந்து தனது 24 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததை அடுத்து, பாதிக்கப்பட்ட தனது மகள் ஒரு புகாரை அளித்ததாகவும், அதன் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் மீண்டும் ஜாமினில் வெளிவந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜாமினில் வெளிவந்த அந்த நபர்கள், அவர்கள் மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகார்களை வாபஸ் வாங்கச் சொல்லி துன்புறுத்தியதாகவும், இதைத் தாங்க முடியாததால் தனது மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மீண்டும் புகார் அளித்துள்ளார்.

Tags : #SEXUALABUSE #SUICIDEATTEMPT #UTTERPRADESH #WOMAN