'11 வயது'.. 'ஒரே வருடத்தில் பலாத்காரம் செய்த 500 பேர்.. ஒரு இரவில் மட்டும் 10 பேர்'.. நடுங்கவைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Oct 08, 2019 04:06 PM

லண்டனின் டெல்ஃபோர்டு மாகாணத்துக்கு உட்பட்ட 40 வயது பெண்மணி ஒருவர் தனக்கு நேர்ந்த மோசமான பாலியல் பலாத்கார கொடுமைகளை பத்திரிகைகளில் பகிர்ந்ததை அடுத்து, உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டுபண்ணி வருகிறது.

girl abused by 500 men at her 11th age in gun point

பெண்கள் பாலியல் தொல்லை அல்லது பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்படுவதற்கு எதிரான குரல்களை #MeToo போன்ற ஹேஷ்டேகுகளின் கீழ் பல பெண்களும் பதிவு செய்தனர்.  ஆனால் 11 வயதில் இருந்து 19 வயது வரை தனக்கு  நேர்ந்த பாலியல் வன்கொடுமைகளை 40வது வயதில் பெண்மணி ஒருவர் வெளியில் சொல்லியிருக்கிறார்.

அதன்படி, உறவினர் வீட்டில் வளர்ந்த தன்னை 1980களில், அதாவது தனது 11 வயதில் வேறொரு ஆணின் கைகளில் ஒப்படைத்ததாகவும், அதன் பின்னர், சிறுமியாய் இருந்த தன்னை, அந்த நபர் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்ததோடு, பல ஆண்களின் பாலியல் இச்சைக்கு இரையாக்கியதாகவும், இப்பெண்மணி கூறியுள்ளார்.

எனினும் இவற்றில் இருந்தெல்லாம் தப்பி, தனது 14 முதல் 16 வயதுக்கிடையே பள்ளி சென்றபோது முறையான வருகை இல்லாததால் ஆசிரியர் புறக்கணித்ததாகவும், பின்னர் தனது 19வது வயதில், பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாக தான் அளித்த புகாரை எடுத்துக் கொள்ளாமல், தனது  நடத்தையை தவறானதாகக் கருதி, காவலர்கள் தன்னை கைது செய்ததாகவும் அப்பெண்மணி குறிப்பிட்டுள்ளார்.

1980லிருந்து 1989 வரையிலான ஆண்டுகளில், சராசரியாக ஒரு இரவில் 10 ஆண்களும், குறிப்பாக தனது 11வது வயதில் தன்னை சுமார் 500 ஆண்களும் தன்னை பலாத்காரம் செய்திருக்கலாம் என்றும், இதில் பல துப்பாக்கி முனையில் நிகழ்ந்ததாகவும் அப்பெண்மணி தற்போது அளித்துள்ள வாக்குமூலம், பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SEXUALABUSE #GIRL #WOMAN