'அசுர வேகத்தில் மோதிக்கொண்ட அரசு மற்றும் தனியார் கல்லூரி பேருந்துகள்'.. 'அலறித் துடித்த மாணவிகள்'.. 30க்கும் மேற்பட்டோரின் பரிதாப நிலை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Oct 10, 2019 01:15 PM
சேலம் அருகே அரசுப் பேருந்தும், தனியார் கல்லூரிப் பேருந்தும் நேருக்கு மோதியதில் விபத்துக்குள்ளானதில் மாணவிகள் உட்பட 35 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சேலம், அயோத்தியாப்பட்டினம் அருகே ராமலிங்கபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி பேருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரியை நோக்கி, வெகுவேகமாக சென்றுகொண்டிருந்தது. ஆனால் அயோத்தியாப்பட்டினம் பிரிவுசாலையை பேருந்து நெருங்கும்போதுதான் இந்த விபத்து திடீரென நிகழ்ந்துள்ளது. அயோத்தியாப்பட்டினம் பிரிவுசாலையில், வாழப்பாடியில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து, அயோத்தியாப்பட்டினத்துக்குள் சென்று திரும்புவது வழக்கம். இதற்காக, வந்த அரசுப்பேருந்து வலது பக்கமாக திரும்பி சாலையை கடக்க முனைந்துள்ளது.
ஆனால் கொஞ்ச தூரம் சாலையைக் கடந்த நிலையில்தான், இடப்புறம் வேகமாக வந்துகொண்டிருந்த தனியார் கல்லூரிப் பேருந்துடன் நேருக்கு நேருக்கு மோதியது. கடைசி நேரத்தில் பேருந்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாததால், நடந்த இந்த விபத்தில் அரசுப் பேருந்தின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. மேலும் கல்லூரி மாணவ மாணவிகள் 5 பேரும், பேருந்து பயணிகள் 30 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து காளிப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் தனியார் கல்லூரிப் பேருந்து டிரைவர் வேகமாக வந்ததே விபத்துக்குக் காரணமாக அக்கம் பக்கத்தினரால் குறிப்பிடப்பட்டுள்ளது.