‘ரயிலில் அடிபட்டு உயிரிழந்த பிச்சைக்காரர்’.. ‘வங்கிக் கணக்கைப் பார்த்து’.. ‘அதிர்ந்துபோய் நின்ற போலீஸார்’..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Oct 07, 2019 01:16 PM
மும்பை புறநகர் ரயிலில் பிச்சை எடுத்துவந்த முதியவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.
மும்பை கோவண்டி புறநகர் பகுதியில் பிச்சை எடுத்துவந்த முதியவர் பிரேடிசந்த் பன்னாராம்ஜி ஆசாத் (82). பல ஆண்டுகளாக புறநகர் ரயிலில் பிச்சை எடுத்துவந்த இவர் உறவினர்கள் யாரும் இல்லாததால் தனியாக வசித்துவந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ரயிலில் அடிபட்டு பிரேடிசந்த் உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
விசாரணையில் பிரேடிசந்த் வசித்துவந்த குடிசை குறித்த விவரம் கிடைக்க போலீஸார் அங்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கிருந்த ஒரு பெட்டியில் இருந்து 1.75 லட்சம் ரூபாய்க்கு நாணயங்கள் கிடைத்துள்ளன. அத்துடன் வங்கி ஒன்றில் 8.77 லட்சம் ரூபாய் அவரது பெயரில் பிக்ஸ்சட் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதற்கான ரசீதும் அங்கு கிடைத்துள்ளது. மேலும் அவ்வப்போது பிச்சை எடுக்கும் நாணயங்களை சேர்த்து 96 ஆயிரம் ரூபாய் வங்கி சேமிக்குக் கணக்கில் வைத்திருப்பதற்கான ரசீதும் இருந்துள்ளது.
இதைப் பார்த்து அதிர்ந்துபோன போலீஸார் மேலும் விசாரணை நடத்தியதில் அவருக்கு சுகதேவ் என்ற ஒரு மகன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேடிசந்த் தனது வங்கிக் கணக்கு உள்ளிட்ட அனைத்துக்கும் மகன் சுகதேவை வாரிசாக பதிவு செய்துள்ள நிலையில் சுகதேவைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.