பாலியல் 'தொல்லை' கொடுத்த கண்டக்டர்..ஓங்கி 'அறைந்த' பெண்..போலீஸ் புகார்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Oct 03, 2019 02:15 PM

ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடத்துநர் மீது,இளம்பெண் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Bus Conductor Abused Lady Passenger in Chennai-Kumbakonam

சென்னை பெரம்பூரை சேர்ந்த தமிழ்ச்செல்வி(28) என்ற பெண் சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு அரசு விரைவுப்பேருந்தில் சென்றுள்ளார்.பேருந்து கும்பகோணம் அருகே சென்றபோது அந்த பேருந்தின் நடத்துநர் ராஜு அவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ்ச்செல்வி,ராஜூவை ஓங்கி அறைந்ததாக தெரிகிறது.மேலும் கூச்சலிட்டு பேருந்தை நிறுத்தி காவல் நிலையத்தில் ராஜு மீது தமிழ்ச்செல்வி புகார் அளித்துள்ளார்.ராஜு மீது ஏற்கனவே பாலியல் தொல்லை புகார்கள் இருந்ததால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது தமிழ்ச்செல்வி அளித்த புகாரின்பேரில் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.