விடாதே..அப்டித்தான்..நண்பனின் மகிழ்ச்சிக்காக.. இளைஞர் செய்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Oct 03, 2019 05:37 PM

ஆஸ்திரேலிய நாட்டின் ஐரே பெனிசுலா பகுதியில் காவல்துறை அதிகாரியாகப் பணிபுரிந்து வருபவர் வேலான் ஜான்காக்.இவர் அரியவகை விலங்கு ஒன்றை கற்களால் அடித்து அதனைக் கொன்ற செய்தி விலங்குநல ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Australian police officer under investigation for stoning wombat

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவ,இதைப்பார்த்த பலரும் இதற்கு தங்களது கடும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வீடியோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக விடுமுறை நாளைக் கழித்துவிட்டு ஜான் காரில் செல்கிறார்.காரில் சென்ற இவர் ரோட்டில் சென்ற அரியவகை பிராணியாக கருதப்படும் வோம்பட் ஒன்றைப் பார்த்து காரைவிட்டு கீழே இறங்குகிறார்.

தொடர்ந்து அந்த வோம்பட்டை விரட்டி அதனை கற்களால் அடித்து துரத்துகிறார். மேலே சட்டை எதுவும் இல்லாமல் கீழே அரைக்கால் டவுசர் மட்டும் அணிந்து இவர்அந்த வேம்பட்டை அடிக்க, காரில் இருக்கும் அவரது நண்பர்கள், ''விடாதே.அப்டித்தான்.அடிச்சு கொல்லு,'' என ஆரவாரம் செய்கின்றனர்.

இதனால் உற்சாகம் கொள்ளும் ஜான் அந்த வேம்பட்டை இறுதியில் கொன்று விடுகிறார். தற்போது ஜான் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மீது விசாரணை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

Tags : #POLICE #AUSTRALIA