‘தலைப்பிரசவம்’!.. ‘2 தலை, 3 கைகள், 4 உள்ளங்கையுடன் பிறந்த குழந்தை’.. அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Nov 25, 2019 03:28 PM

இளம்பெண்ணின் தலைப்பிரசவத்தில் 2 தலை, 3 கைகளுடன் ஆண் குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Woman gives birth babyboy with 2 heads 3 hands in MP

மத்தியபிரதேச மாநிலம் விடிவா மாவட்டத்தில் உள்ள சுஜா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜஸ்வந்த் ஆஹிர்வார். கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அவரது மனைவி கர்ப்பம் அடைந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியான அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை 2 தலை, 3 கைகள், 3 கைகளில் 4 உள்ளங்கைகள் இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை அடுத்து குழந்தையை தீவிர சிகிச்சை கண்காணிப்பு பகுதியில் அனுமதித்துள்ளனர். குழந்தையும், தாயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : #WOMAN #BORNBABY #TWINS #MADHYAPRADESH #PREGNANT