'வீட்டு வாசலில் புதைக்கப்பட்ட பெண் குழந்தை' .. 'கொட்டும் மழையில் தோண்டி எடுத்த போலீஸ்'.. மதுரை அருகே பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 22, 2019 09:53 PM

வீட்டின் முன் புதைக்கபட்ட பெண் குழந்தையை கொட்டும் மழையில் போலீசார் தோண்டி எடுத்தனர்.

Born baby girl buried infront of house near Madurai

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியை சேர்ந்தவர்கள் ஜெயசந்திரன்-ஜெயப்ரியா தம்பதி. இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி ஜெயப்ரியாவுக்கு சுகப்பிரசவத்தில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையின் தலையில் கட்டி இருந்ததாகவும், அதற்காக தொட்டப்பநாயக்கணூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் தனியார் மருத்துவமனை ஒன்றில் தலையில் உள்ள கட்டிகாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தைக்கு காய்ச்சல் வந்ததாகவும், அதனால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாவும், பின்னர் குழந்தை இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து வீட்டின் முன் குழி தோண்டி மறைமுகமாக குழந்தையை புதைத்துள்ளனர்.

இதனையறிந்த தொட்டப்பநாயக்கணூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சுசிலா, இதுதொடர்பாக தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உடனே சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்துள்ளனர். அங்கு மருத்துவக் குழுவினருடன் கொட்டும் மழையில் குழந்தையை தோண்டி எடுத்துள்ளனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இது பெண்சிசு கொலையா? அல்லது இயற்கை மரணமா? என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : #MADURAI #CRIME #POLICE #BORNBABY #DIES