‘கருக்கலைப்புக்கு பின்’ கணவர் வீட்டிற்கு சென்ற.. இளம்பெண் ‘சடலமாக மீட்பு’.. ‘அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 24, 2019 12:01 AM

திருச்சி அருகே இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Trichy Woman Found Dead In Husbands House Mother Blames InLaws

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சடையம்பட்டியைச் சேர்ந்த ஜீவிதா என்பவருக்கும், கர்ணாம்பட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து ஜீவிதா கர்ப்பமடைய, குழந்தைக்கு முறையான வளர்ச்சி இல்லை என கருக்கலைப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு தன் தாய் வீட்டில் கடந்த 2 மாதங்களாக இருந்த ஜீவிதா 4 நாட்களுக்கு முன் கணவர் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் நேற்று ஜீவிதா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவருடைய உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீஸாரிடம், ஜீவிதாவின் தாய் அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளார்.

Tags : #TRICHYWOMANDEATH #WOMAN #SUICIDE #ABORTION #HUSBAND #MOTHER