'6 மாத கர்ப்பிணியான காதலி'... ‘மனம் மாறிய இளைஞர்'... 'கடைசியில் நடந்த ட்விஸ்ட்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 23, 2019 06:59 PM

திருச்சி அருகே, காதலித்துவிட்டு, 6 மாத கர்ப்பிணியான பின்பு, இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The young man who refused to marry his pregnant lover

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பச்சமலை, தண்ணீர்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் பிரதாப். 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இந்நிலையில், இவர் அதேப் பகுதியில் வசித்து வரும் சூரியா என்ற பெண்ணுடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சூரியா கர்ப்பம் ஆகியுள்ளார். கர்ப்பிணி ஆகி 6 மாதம் ஆன நிலையில்தான், இந்த விஷயம் சூரியாவின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து மகளின் நிலைமைக்கு காரணமாக, பிரதாப்பிடம் சென்று, தங்களது மகளை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளனர். ஆனால் அவர், இளம்பெண் சூரியாவை திருமணம் செய்ய மறுத்துள்ளார். அதன்பின்னர், பெண்ணின் பெற்றோர் சென்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

பின்னர் நடந்த விசாரணையில் இருவரும் மேஜர் என்று தெரியவந்துள்ளது. இதன்பிறகு,  பிரதாப்பை அழைத்து போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர். இதில் மனம் மாறிய இளைஞர் பிரதாப், கோவிலில் வைத்து சூரியாவை திருமணம் செய்துகொண்டு மனைவியாக ஏற்றுக்கொண்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை வழங்கியுள்ளது.

Tags : #GIRL #LOVER #BOY #MAN #WOMAN