'ஜன்னலில் இருந்து தூக்கிவீசப்பட்ட பெண்'.. 'நிக்காமல் போன பஸ்' ..'காப்பாத்தாமல் வேடிக்கை பார்த்த மக்கள்'.. உறைய வைத்த வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Nov 24, 2019 10:34 AM

பேருந்தின் ஜன்னலில் இருந்து தூக்கிவீசப்பட்டு பெண் ஒருவர் கீழே விழும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Woman thrown moving bus pavement driver fails stop

உக்ரைன் நாட்டின் உடஸ்ஸா என்ற இடத்தில் பயணிகள் பேருந்து ஒன்று சென்றுகொண்டு இருந்துள்ளது. அப்போது பேருந்து வளைவில் வேகமாக திரும்பியபோது சுமார் 58 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் ஜன்னல் வழியே தவறி விழுந்துள்ளார். நடைமேடையில் விழுந்ததில் தலை உள்ளிட்ட உடம்பின் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

ஆனால் அருகில் இருந்தவர்கள் வேடிக்கை பார்த்தவாறு நின்கின்றனர். யாரும் அப்பெண்ணுக்கு உதவமுன்வரவில்லை. இந்நிலையில் யாரோ ஒருவர் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை அடுத்து விரைந்து வந்த ஆம்புலன்ஸ் வாகனம் படுகாயம் அடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பெண் பேருந்தின் ஜன்னலில் இருந்து தவறி விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Tags : #ACCIDENT #CCTV #BUS #WOMAN #UKRAINE