VIDEO: எப்டி சிக்ஸ் போச்சு?.. 'தலையில்' கைவைத்த கோலி.. கையை 'விரித்த' புஜாரா.. 'உறைந்து' போன ஷமி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Nov 25, 2019 02:24 PM

இந்தியா-வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 4 விக்கெட்டுகளை விரைவாக இழந்து திணறியது. அப்போது 5-வது விக்கெட்டுக்கு  மெஹிதி ஹாசன், முஷ்பிகுர் ரஹீம் பேட்டிங் செய்து வந்தனர். ரஹீம் 40 ரன்களையும், மெஹிதி 10 ரன்களையும் எடுத்து ஆடி வந்தனர்.

Mohammed Shami Bouncer Goes For Bizarre Six, Watch Video

அப்போது போட்டியின் 24-வது ஓவரின் 5-வது பந்தை ஷமி வீச, மெஹிதி ஹாசன் எதிர்கொண்டார். பந்து பவுன்ஸ் ஆகிவந்ததால் மெஹிதி அதை எதிர்கொள்ள திணறி கண்ணை மூடினார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அந்த பந்து எட்ஜ் ஆகி சிக்ஸருக்கு சென்றது.

இதைப்பார்த்த விராட் கோலி பந்து எப்படி சிக்ஸ் போனது என தலையில் கைவைக்க, எல்லைக்கோட்டுக்கு அருகே நின்ற புஜாரா இந்த பந்தை எப்படி பீல்டிங் செய்வது என கையை விரித்தார். பந்தை வீசிய ஷமியோ அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.