'மண்ணைத் தோண்டி'.. 'பச்சிளம் குழந்தையை'.. 'உயிரோடு'.. நெஞ்சை பதறவைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Nov 01, 2019 01:34 PM

ஹைதராபாத்தில் பச்சிளம் குழந்தையை உயிரோடு புதைக்க முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நடுங்க வைத்துள்ளது. 

2 men arrested in hyderabad for trying to bury a baby alive

ஹைதராபாத்தின் கரீம் நகரில் உள்ள ஒரு பகுதியில் பட்டப்பகலில் இரண்டு பேர் பச்சிளம் குழந்தையை புதைப்பதற்காக தோண்டிக்கொண்டிருந்துள்ளனர். இதனைப் பார்த்ததும் ஆட்டோ டிரைவர் ஒருவர் அதிர்ச்சி ஆகியுள்ளார். 

உடனே அவர் கொடுத்த தகவலின்பேரில், அங்கு விரைந்து அவர்களை கைது செய்த போலீஸார், விசாரித்ததில் அவர்களில் ஒருவர் குழந்தையின் தந்தை என்றும், இன்னொருவர் குழந்தையின் தாத்தா என்றும் தெரியவந்தது. மேலும் மருத்துவமனையில் நடந்த ஒரு ஆபரேஷன் தோல்வியுற்றதால் குழந்தை இறந்துவிட்டதாகவும், அதனால்தான் புதைக்க முற்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். 

ஆனால் பரிசோதித்து பார்த்ததில் குழந்தை உயிரோடு இருப்பது கண்டறியப்பட்டது. அப்போது அதிர்ச்சி அடைந்த அந்த 2 பேரும் இதை அறியாமல் குழந்தையை புதைக்க முற்பட்டதாக கூறியுள்ளனர். இருப்பினும் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். 

Tags : #HYDERABAD #POLICE #HOSPITAL #BABY