'இவ்ளோ நேரமா ஆபீஸ்ல வொர்க் பண்ணுவ?'... 'ஆத்திரத்தில்' கணவன் செய்த 'வெறிச்செயல்'.. பதற வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Dec 23, 2019 01:36 PM

புனேவில் உள்ள பிம்ப்ரி சிஞ்ச்வாடு ( Pimpri Chinchwad)பகுதியைச் சேர்ந்தவர் ஹனுமந்த் பாபுராவோ லோகந்த் (Hanumant Baburao Lokhande).  திருமணமாகி 20 வருடங்கள் கடந்த நிலையில், தற்போது 58 வயதாகியுள்ள இவர், 40 வயதாகவும் தனது மனைவி ஷைலாவுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு இளம் மகன் உள்ளார்.

woman working long hours, angry husband kills her over fight

அப்பகுதியில் உள்ள ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரியும் ஹனுமந்த்,  இன்று அதிகாலை 4 மணி அளவில், தனது மனைவி ஷைலாஜாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் பேச்சு முற்றிப் போயுள்ளது. வீட்டின் முதல் மாடி தளத்தில் வசித்து வந்த இவர்களது மகன் சத்தம் கேட்டு, படிக்கட்டு வழியே கீழே வந்துள்ளார்.

ஆனால், கதவு உட்புறமாக தாழிடப்பட்டிருந்ததால், பக்கவாட்டில் இருந்து ஜன்னல் வழியே சென்று பார்த்துள்ளார். அப்போது தன் தாய் ஷைலாவை, தனது தந்தை ஹனுமந்த் கடுமையாக நடத்துவதாக சத்தம் கேட்கவே, வேறு வழியில்லாமல் ஜன்னலை உடைத்துள்ளார். அப்போது ஹனுமந்த், ஷைலாவை அரிவாளால் வெட்டிக் கொன்றுகொண்டிருந்துள்ளார்.

கண்முன்னே இந்த சம்பவத்தை பார்த்த, இவர்களது மகன் கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் விரைந்து வந்து ஹனுமந்த்தை கைது செய்ததோடு, ஷைலாவின் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி பேசிய ஹனுமந்த்,  ‘காலையில் 7, 8 மணிக்கு வேலைக்கு சென்றால் எனது மனைவி வீட்டுக்கு திரும்பவே 12 மணி நேரம் ஆகிவிடுகிறது, இதனால் அவளுடன் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் அரிவாளாள் வெட்டிக்கொன்றேன்’ என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Tags : #PUNE #HUSBANDANDWIFE #WORK #JOB