'என்கூட வந்துருமா' காலில் விழுந்த தந்தை... மகளின் காதல் 'திருமணத்தால்' விபரீத முடிவு... வேலூரில் பதட்டம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Jan 08, 2020 08:29 PM

வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த திவிதா(19) என்பவரும், மேல்பாடி பகுதியை சேர்ந்த ஷியாம்(20) என்பவரும் காதலித்து வந்தனர். ஷியாம் வேறு சமூகத்தை என்பதால் திவிதா வீட்டில் இவர்கள் காதலை ஒப்புக்கொள்ளவில்லை.

Father died after daughter\'s love marriage, in Vellore

இதற்கிடையில் திவிதா வீட்டில் இருந்து வெளியேறி பெங்களூர் சென்று ஷியாமை திருமணம் செய்து கொண்டார். மகள் வீட்டிலிருந்து காணாமல் போனதால் திவிதாவின் தந்தை ரவி போலீசில் புகார் செய்தார். காதல் திருமணம் செய்துகொண்ட திவிதா நேற்று முன்தினம் ஷியாமுடன் வேலூர் கலெக்டர் அலுவலகம் வந்துள்ளார்.

அங்கு கலெக்டர் சண்முகசுந்தரத்தை சந்தித்த திவிதா தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். கலெக்டர் உத்தரவின்பேரில் போலீசார் ரவியை கலெக்டர் அலுவலகம் அழைத்து வந்தனர். அங்குவைத்து மகளை பார்த்த ரவி கலங்கி அழுதுள்ளார். இரு தரப்பினரையும் அழைத்து காவல் நிலையத்தில் பேசியுள்ளனர்.

அப்போது ரவி என்கூட வந்துருமா என்று கூறி ரவி மகளின் காலில் விழுந்து அழுதுள்ளார். அதைக்கண்டு திவிதா சற்று நகரும்போது அவரது கால் ரவிமீது பட்டுவிட்டது. இதைக்கண்டு அப்பாவை ஒதைக்குறியா? என்று ரவி கேட்டுள்ளார். இதையடுத்து வீடு திரும்பிய ரவி பூச்சிக்கொல்லி மருந்தைக் குடிக்க, அவரை வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவி இறந்து விட்டார்.

இதனால் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்படும் சூழல் தற்போது உருவாகியுள்ளது. இதையடுத்து வேலூர் வள்ளிமலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

Tags : #POLICE