‘கொலுசை அடகு வைத்து குடித்த கணவன்’! ‘மனைவி கொடுத்த கொடூர தண்டனை’.. விழுப்புரம் அருகே பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 12, 2019 01:38 PM

கொலுசை விற்று குடித்த கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Wife burned his husband with petrol in Villupuram

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் செந்தில் (35). இவரது மனைவி சித்ரா (32). இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கொத்தனார் வேலை செய்து வரும் செந்திலுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தினமும் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று சித்ரா வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது போதையில் தள்ளாடியபடி செந்தில் வீட்டுக்கு வந்துள்ளார். இதனைப் பார்த்த சித்ரா, ‘குடிக்க பணம் எப்படி கிடைத்தது?’ என கேட்டுள்ளார். பின்னர் வீட்டுக்குள் சென்று பீரோவை பார்த்தபோது வெள்ளிக்கொலுசு இல்லாமல் இருந்துள்ளது. இதனை அடுத்து கொலுசை அடமானம் வைத்து செந்தில் குடித்திருப்பது சித்ராவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் செந்தில் வீட்டுக்குள் சென்று படுத்துள்ளார்.

அப்போது வீட்டுக்கு வெளியே இருந்த இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை பிடித்து செந்தில் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் செந்தில் அலறித்துடித்துள்ளார். பின்னர் சித்ராவே 108-க்கு போன் செய்துள்ளார். விரைந்து வந்த 108 ஊழியர்கள் செந்திலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #CRIME #HUSBANDANDWIFE #VILLUPURAM #PETROL #BURNED