‘வீட்டில் அடிக்கடி தகராறு’! கொதிக்கும் எண்ணையை கணவன் மீது ஊற்றிய மனைவி..! சென்னையில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 07, 2019 05:22 PM

குடும்பத் தகராறில் கணவன் மீது மனைவி கொதிக்கும் எண்ணையை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Wife killed husband by pouring hot oil in Chennai

சென்னை திருவிக நகரை சேர்ந்தவர் உபயதுல்லா. இவருடைய மனைவி நஸ்ரின். வீட்டில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2ம் தேதி கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் சண்டை நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த நஸ்ரின் கொதிக்கும் எண்ணையை கணவன் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்தகாயமடைந்த உபயதுல்லாவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த உபயதுல்லா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மனைவி நஸ்ரினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #CRIME #MURDER #HUSBANDANDWIFE