தானாக நகர்ந்து சென்ற ‘வீல்சேர்’.. ஹாஸ்பிட்டல் சிசிடிவி-ல் சிக்கிய திகில் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Sep 25, 2019 11:47 AM
மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சக்கர நாற்காலி திடீரென நகர்ந்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகர் மாநிலத்தில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் சக்கர நாற்காலி தானாக நகரும் திகில் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இரு நாற்காலிகளுக்கு மத்தியில் இருந்த சக்கர நாற்காலி யாரோ பின்னோக்கி இழுப்பதுபோல முதலில் பின்னே நகர்கிறது. இதனை அடுத்து யாரோ ஒருவர் தள்ளிக்கொண்டு போவதுபோல முன்னோக்கி செல்கிறது.
மேலும் சிறிய படிக்கட்டு போன்ற அமைப்பையும் தாண்டி செல்கிறது. சாலை வரை சென்ற சக்கர நாற்காலியின் பயணம் கடைசியாக அங்கு நின்றுள்ளது. இதனை இரவு பணியில் இருந்த காவலாளி அதிர்ச்சியுடன் பார்க்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் தரை வழுவழுப்பாக இருந்ததாலும், மெல்லிய காற்று வீசியதாலும் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.