‘தோனி ஸ்டைலில் மின்னல் வேக ஸ்டெம்பிங்’.. ‘மாஸ் காட்டிய ஐபிஎல் பிரபலம்’.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Sep 16, 2019 10:36 PM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ மின்னல் வேக ஸ்டெம்பிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: Bairstow does a Dhoni to send Marnus Labuschagne packing

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2 -ல் ஆஸ்திரேலிய அணியும், ஒரு போட்டியில் இங்கிலாந்து அணியுன் வெற்றி பெற்றது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. நடந்து முடிந்த கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது.

ஓவல் மைதானத்தில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற 399 ரன்களை இலக்காக இங்கிலாந்து நிர்ணயித்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. இதில் மார்கஸ் ஹாரிஸ் 9 ரன்னிலும், டேவிட் வார்னர் 11 ரன்னிலும் அவுட்டாகினர். அனைத்து போட்டிகளிலும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்டீவ் ஸ்மித் 23 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து 263 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதில் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ ஆஸ்திரேய வீரர் மார்கஸ் லபுஸ்சங்னேவை மின்னல் வேக ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றினார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி போல் மின்னல் வேக ஸ்டெம்பிங் செய்த ஜானி பேர்ஸ்டோவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜானி பேர்ஸ்டோ ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Tags : #MSDHONI #JONNYBAIRSTOW #MARNUSLABUSCHAGNE #TEST #ENGVAUS #STUMPING #ASHES19 #CRICKET #VIRALVIDEO