‘அம்மா பக்கத்துல அசந்து தூங்கிட்டு இருந்த குழந்தை’.. ‘நைசா கடத்த முயன்ற மர்ம நபர்’.. அதிர வைத்த வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Sep 18, 2019 07:44 PM

வீட்டுக்கு வெளியே சாலையில் தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை மர்ம நபர் கடத்த முயன்ற வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Man caught trying to Kidnap sleeping 4 year old baby in Punjab

பஞ்சாப் மாநிலம் லூதியனா ரிஷி நகர் பகுதியில் நேற்றிரவு பெண் தனது குடும்பத்தினருடன் வீட்டுக்கு வெளியே தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். கட்டிலில் தாயின் அருகே 4 வயது குழந்தை தூங்கிக்கொண்டி இருந்துள்ளது. அப்போது அந்த வழியே டிரை சைக்கிளில் வந்த மர்ம நபர் தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை கடந்த முயன்றுள்ளார். அவர் குழந்தையை எடுத்து சைக்கிளில் வைக்கும்போது சத்தம் கேட்டு எழுந்த தாய், இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனே மர்ம நபரிடம் இருந்து குழந்தையை மீட்டு கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் குழந்தையை கடத்த முயன்ற மர்ம நபரை பிடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார். இது அப்பகுதியில் இருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து காவல் துறையினரிடம் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, போலீசார் அந்த நபரை கண்டறிந்து கைது செய்துள்ளனர். இந்நிலையில் குழந்தையை கடத்த முயற்சித்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CCTV #KIDNAP #CHILD #PUNJAB