‘கழிப்பறையில் தலைகுப்புற கிடந்த பிஞ்சு குழந்தை’.. அதிர்ச்சியில் உறைந்த மருத்துவமனை ஊழியர்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Sep 15, 2019 07:33 PM

அரசு மருத்துவமனையின் கழிப்பறையில் இளம் சிசு உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newborn baby\'s dead body was found in Vaniyambadi govt hospital

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனை கழிவறையை வழக்கம் போல் ஊழியர்கள் சுத்தம் செய்ய சென்றுள்ளனர். அப்போது பிறந்து சில மணிநேரமே ஆன பெண் குழந்தை ஒன்று கழிவறைக்குள் தலைகுப்புற கிடந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் உடனே மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து குழந்தை உடனடியாக கழிவறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த குழந்தை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்து குழந்தையை யார் இங்கு கொண்டுவந்தார்கள் என விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாக வாணியம்பாடி தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார். பிறந்த குழந்தை கழிவறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #VANIYAMBADI #HOSPITAL #NEWBORN #BABY #TOILET