‘ஓடும் ரயிலில் ஏற முயற்சித்த இளைஞருக்கு’.. ‘நொடியில் நடந்த விபரீதம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Sep 24, 2019 05:24 PM

ஓடும் ரயிலில் ஏற முயற்சிக்கும் இளைஞர் ஒருவர் ரயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையே சிக்கிக் கொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Man slips trying to board moving train RPF personnel save him

குஜராத் மாநிலம் அகமதாபாத் ரயில் நிலையத்தில் இருந்து ஆஷ்ரம் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை டெல்லி நோக்கி புறப்பட்டுள்ளது. அப்போது ரயில் நகர்ந்துகொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு வேகமாக ஓடி வந்த இளைஞர் ஒருவர் அதில் ஏற முயன்றுள்ளார். ஆனால் படியில் கால் வைக்கும்போது வழுக்கி அவர் படிக்கட்டுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையே சிக்கிக் கொண்டுள்ளார்.

இதைப் பார்த்த அருகிலிருந்த ரயில்வே காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு அந்த இளைஞரை ரயிலினுள் தள்ளிக் காப்பாற்றியுள்ளனர். அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ள இந்திய ரயில்வே அமைச்சகம் ஓடும் ரயிலில் இதுபோல ஏறவோ, இறங்கவோ முயற்சிக்க வேண்டாம் எனப் பயணிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

 

 

Tags : #GUJARAT #AHMEDABAD #MOVING #TRAIN #MAN #POLICE #SAVE #PLATFORM #VIDEO #CCTV