‘இப்படி ஒரு அவுட்ட ஹிஸ்டரில பாத்ததில்ல’.. ‘கலாய்த்து வறுத்தெடுக்கும் ரசிகர்கள்’.. ‘வைரலாகும் வீடியோ’..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Sep 24, 2019 03:10 PM
ஆஸ்திரேலிய வீரர் மார்க் காஸ்கிரோவ் ரன் அவுட் ஆகும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டின் 2ஆம் பிரிவில் லீஸ்செஸ்டெர்ஷைர் - கிலாமோர்கன் அணிகள் மோதியுள்ளன. கடந்த 19ஆம் தேதி நடந்த இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மார்க் காஸ்கிரோவ் ரன் அவுட் ஆன விதத்தால் ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார். மார்க் காஸ்கிரோவ் அடித்த பந்து பக்கத்தில் இருந்த ஃபீல்டரின் கையில் சிக்கியுள்ளது.
அதன் பிறகும் அவர் ரன் எடுக்க முயற்சிக்க, என்ன செய்கிறோம் என உணர்வதற்குள் அவரை எதிரணியினர் ரன் அவுட் செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள இந்த வீடியோ ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஃபீல்டர் கையில் பந்து இருப்பதைப் பார்த்தும் அவர் எப்படி ரன் எடுக்க முயற்சித்துள்ளார், இது ப்ளே ஸ்டேஷனில் ரன் ஓடும் பட்டனை தவறாக அழுத்தியது போல உள்ளது என ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.
You know, there might not have been a run there... 🤣 pic.twitter.com/MKS6MI8dMh
— County Championship (@CountyChamp) September 19, 2019
