வரதட்சணை கேட்டு மருமகளை தாக்கிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி..? பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Sep 20, 2019 11:15 PM

வரதட்சணை கேட்டு மருமகளை தாக்கிய முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குடும்பத்தினரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Retired Madras High Court judge manhandling his daughter in law

ஹைதராபாத் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியான ராமமோகன ராவின் மகன் வஸிஸ்தா என்பவருக்கும், சிந்து ஷர்மா என்வருக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சிந்து ஷர்மாவிடம் கணவர் அடிக்கடி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து வரதட்சணை கேட்டு தன்னை துன்புறுத்தியதாக கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சிந்து ஷர்மா புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சிந்து ஷர்மா தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. குழந்தைகளின் கண் முன் தாய் தாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CCTV #RAMMOHANRAO #MANHANDLING #MADRASHIGHCOURT #JUDGE #TAMILNADU #DOWRYHARASSMENT