‘முக்கியமான விக்கெட்’ ‘ரிஸ்க் எடுத்த விராட் கோலி’.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Sep 18, 2019 09:08 PM
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் விராட் கோலி அபாரமாக கேட்ச் பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முன்னதாக இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேனான முதல் டி20 போட்டி மழையால் தடைப்பட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2 -வது போட்டி இன்று (18.09.2019) மொகாலில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து தென் ஆப்பிரிக்க வீரர்கள் பேட்டிங் செய்ய களமிறங்கினர். இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் டி காக் (52) அதிரடியாக ஆடி இந்திய பந்து வீச்சளார்களுக்கு சிக்கலை ஏற்படுத்தினார். அப்போது நவ்தீப் சைனி வீசிய ஓவரில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து டி காக் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை தென் ஆப்பிரிக்க எடுத்தது. இந்நிலையில் விராட் கோலி அபாரமாக கேட்ச் பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Oh man !! What a catch by @imVkohli #INDvSA pic.twitter.com/SRbWkwcDFA
— Natukula naveen (@Natukulanaveen1) September 18, 2019
