மருத்துவமனையில் 'பற்றியெரிந்த' தீ..பச்சிளம் 'குழந்தைகள்' 8 பேர் பலி!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Sep 24, 2019 09:01 PM

அல்கெரியா நாட்டில் அல்ஜீரியர்ஸ் நகரில் உள்ள மகப்பேறு மருத்துவமனை ஒன்றில்,உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 3.50 மணியளவில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.தீ மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியதால் அந்த இடமே புகை மண்டலமாக காட்சியளித்தது.

Eight Newborn Babies Die in Algeria Hospital Fire,

தகவல் அறிந்து சுமார் 12 வண்டிகளில் வந்த தீயணைப்பு படையினர் 11 குழந்தைகள், 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் 28 பேர் ஆகியோரை பத்திரமாக போராடி மீட்டனர்.எனினும் 8 பச்சிளம் குழந்தைகள் உடல்கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.குழந்தைகள் உடல் கருகியும், மூச்சுத்திணறியும் உயிரிழந்தன என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

தீ விபத்து தொடர்பாக விசாரணை நடத்திடுமாறு அந்நாட்டு பிரதமர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.