‘வெறித்தனமான கேட்ச்’.. ‘மரண காட்டு காட்டிய சிஎஸ்கே வீரர்’.. வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Sep 18, 2019 11:09 PM
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான 2 -வது டி20 போட்டி இன்று (18.09.2019) மொகாலியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி தென் ஆப்பிரிக்க வீரர்கள் பேட்டிங் செய்தனர். இதில் அதிகபட்சமாக டி காக் 52 ரன்களும், டெம்பா பாவுமா 49 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை தென் ஆப்பிரிக்க அணி எடுத்தது. இந்திய பந்துவீச்சாளர்களில், தீபக் சஹார் 2 விக்கெட்டுகளும், நவ்தீப் சைனி, ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதனைத் அடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா 12 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் கூட்டணி அதிரடி காட்ட ஆரம்பித்தது. இதில் தவான் 40 ரன்களும், விராட் கோலி 72 ரன்களும் எடுத்து அசத்தினர். இதனை அடுத்து 19 ஓவர்களின் முடிவில் 151 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இப்போட்டியின் 13 -வது ஓவரை வீசிய ஜடேஜா, தென் ஆப்பிரிக்க வீரரை கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். சிஎஸ்கே தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Sir-ry for the disturbance. Must watch and must hear video! 🤭 #WhistlePodu #JustSirThings #INDvSA @imjadeja 🦁💛 https://t.co/I2YN8h7gL4
— Chennai Super Kings (@ChennaiIPL) September 18, 2019
