‘திடீரென வேலியைத் தாண்டிக் குதித்த’.. ‘இளைஞர் மேல் பாய்ந்த சிங்கம்’.. ‘வைரலாகும் வீடியோ’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Oct 17, 2019 05:13 PM

டெல்லி விலங்கியல் பூங்காவின் தடுப்பைத் தாண்டி குதித்து இளைஞர் ஒருவர் சிங்கத்தின் முன் சென்று உட்கார்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video Man Sits Face To Face With Lion In Delhi Zoo Rescued

டெல்லி விலங்கியல் பூங்காவில் இளைஞர் ஒருவர் திடீரென இரும்புத் தடுப்பைத் தாண்டிச் சென்று சிங்கத்தின் அருகில் அமர்ந்துகொண்டுள்ளார். பின்னர் அவர் சிங்கத்துடன் நேருக்கு நேர் முகத்தைப் பார்த்து பேசிக்கொண்டிருந்துள்ளார். சிறிது நேரம் அமைதியாக இருந்த சிங்கம் கோபத்துடன் அவரை நோக்கி தாக்க வந்துள்ளது.

அதற்குள் அங்கிருந்தவர்கள் பூங்கா காவலர்களுக்கு தகவல் அளிக்க அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சிங்கத்திடம் இருந்து அந்த இளைஞரை பத்திரமாக மீட்டுள்ளனர். பின்னர் போலீஸார் அந்த இளைஞரிடம் நடத்திய விசாரணையில் பீகாரைச் சேர்ந்த அவருடைய பெயர் ரஹான் கான் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

 

Tags : #DELHI #ZOO #LION #YOUNGSTER #MAN #VIDEO #FACETOFACE #CHATTING