‘திடீரென ரயில்முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற நபர்’.. பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jul 06, 2019 10:25 PM

மும்பையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற நபரின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Cop saved the life of the man by foiling his suicide attempt

மும்பை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் 64 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடைமேடையில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது ரயில் ஒன்று வருவதை பார்த்த அவர் திடீரென கீழே குதித்து தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். அப்போது ரயில் அவரை நெருங்கி வந்ததால் பயணிகள் பயத்தில் கூச்சல் போட்டுள்ளனர்.

இதனை அறிந்து உடனே சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே போலிஸார் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற நபரை காப்பாற்றியுள்ளனர். அந்த நபர் தற்கொலைக்கு முயன்றதை அறிந்த பைலட் ரயிலை சாமர்த்தியமாக நிறுத்தியதால் பெரும் அசாம்பாவிதம் நடக்காமல் தவிர்க்கப்பட்டது. இவை அனைத்து ரயில்வே நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை மும்பை ரயில்வே நிர்வாகம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மேலும் தற்கொலைக்கு முயன்ற நபரை சதூர்யமாக காப்பாற்றிய எஸ்.எச்.மனோஜ் மற்றும் அசோக் என்ற இரு ரயில்வே காவலர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Tags : #MUMBAI #INDIANRAILWAYS #VIRALVIDEO #SUICIDE ATTEMPT