'காத்திருந்தது என்னமோ ரயிலுக்காக'... 'ஆனால் இளம் பெண்ணிற்கு நடந்த'... 'சுவாரசிய சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jul 04, 2019 10:19 AM

மும்பையில் பெய்து வரும் கனமழை மக்களின் அன்றாட வாழ்க்கையையே புரட்டி போட்டுள்ளது. தகவல் தொடர்பு முதல், போக்குவரத்து வரை அனைத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மருத்துவமனை செல்ல ரயில் நிலையம் வந்த பெண்ணிற்கு, ரயில் நிலையத்திலேயே குழந்தை பிறந்த சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.

Young woman delivered a baby on a platform at Dombivli railway station

கனமழையின் காரணமாக இளம் பெண் ஜாஸ்மின் சபிர் சேக் மருத்துவமனைக்கு செல்ல தனது கணவருடன் தாம்பிவ்லி ரயில் நிலையத்துக்கு வந்தார். நிறைமாத கர்ப்பிணியான அவர்  நீண்ட நேரமாக ரயிலுக்காக காத்து கொண்டிருந்தார். ஆனால் மழை பெய்துகொண்டே இருந்ததால் ரயில் வருவதற்கு தாமதம் ஆனது. இதனிடையே திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் என்ன செய்வது என தெரியாமல் தவித்த அவரது கணவர், அங்கிருந்த ரயில்வே காவல்துறையினரின் உதவியை நாடினார்.

இதையடுத்து அங்கிருந்த பெண் காவலர்கள் ஜாஸ்மினை ரயில்வே நிலையத்தில் இருந்த ஒரு ரூபாய்  மருத்துவமனையில் அனுமதித்தார்கள். இந்த மருத்துவமனையானது ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்கு ஏற்படுத்தப்பட்டதாகும். இதனைத்தொடர்ந்து அங்கிருந்த மருத்துவர்கள் அந்த பெண்ணிற்கு சிகிச்சை அளித்தார்கள். அதைத்தொடர்ந்து இளம் பெண் ஜாஸ்மினுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த பெண்ணிற்கு சுகப்பிரசவம் நடந்ததாக அங்கிருந்த செவிலியர்கள் தெரிவித்தார்கள்.

இதனியையே மேற்கொண்டு சிகிச்சை அளிப்பதற்காக, ரயில்வே காவலர்கள் ஜாஸ்மினையும் அவரது குழந்தையையும், அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு  அழைத்து சென்றார்கள். கொட்டும் மழையிலும் ரயில்வே காவல்துறையினரின் உதவியால், பெண்ணிற்கு குழந்தை பிறந்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ செய்தது.

Tags : #MUMBAI #DOMBIVLI RAILWAY #ONE RUPEE CLINIC #WOMAN DELIVERS