'தமிழ்ல பேசாதீங்க' ... 'தென்னக ரயில்வே' அதிரடி உத்தரவு... வெடிக்கும் புதிய சர்ச்சை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Jun 14, 2019 01:50 PM
தமிழகத்தில் ரயில்வே நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறையில் நடக்கும் உரையாடல்கள் தமிழில் இருப்பதை தவிர்க்குமாறு தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது.இதனால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
மதுரை திருமங்கலம் அருகே ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் எதிர், எதிரே வந்து மோதும் சூழல் உருவானது.ஆனால் உரிய நேரத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.இது தொடர்பாக தென்னக ரயில்வே நடத்திய விசாரணையில் ரயில் நிலைய அதிகாரிகள் மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.இதனை தொடர்ந்து நடந்த உயர்மட்ட விசாரணையில்,மொழி பிரச்சனையால் தகவல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக தெரிய வந்தது.
இதனை தொடர்ந்த்து தமிழகத்தில் ரயில்வே நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் உரையாடல்கள் தமிழில் இருப்பதை தவிர்க்குமாறு தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது.மொழி பிரச்சனையால் இது போன்ற தவறுகள் ஏற்படாமல் இருக்க,இந்தி அல்லது ஆங்கிலத்தில் தகவல்களை பரிமாறிக் கொள்ளுமாறு தென்னக ரெயில்வே புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் ரயில்வேயின் புதிய உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதனிடையே பல தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தென்னக ரயில்வே தனது உத்தரவை திரும்ப பெற்றுள்ளது.